RRR படத்தை இயக்கியது பிரதமர் மோடியா? நாடாளுமன்றத்தில் நடந்த காரசார விவாதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 March 2023, 1:56 pm

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியா சார்பில் சிறந்த ஒரினுல் மற்றும் சிறந்த ஆவண குறும்பட விருதில் இந்திய திரைப்படங்கள் வென்று சாதனை படைத்தது.

RRR படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடலும், தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படம் விருதை பெற்றது. இந்திய படங்களல் 2 ஆஸ்கர் விருதை வென்றதற்கு இன்று மாநலிங்களவையில் எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் நடைபெற்ற விவாதத்தின்போது காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், இது தென்னிந்தியர்களுக்கு கிடைத்த வெற்றி.

அதில் அவர்கள் அதிகம் பெருமை கொள்வார்கள், நானும் பெருமை கொள்வேன், நீங்களும் பெருமை கொள்ளலாம். ஒரே ஒரு வேண்டுகோள். ஆஸ்கர் விருது பெற்ற இந்த படங்களை பிரதமர் மோடிதான் இயக்கினார் என மத்திய அரசு ‛கிரெடிட்’ எடுத்துக் கொள்ள கூடாது’ எனப் பேசினார். இதனையடுத்து அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?