அரசு மீது அதிருப்தி.. காசோலையை திருப்பி கொடுக்க திட்டம் : சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவிய எலி வளை தொழிலாளர்கள் முடிவு?!!
Author: Udayachandran RadhaKrishnan23 December 2023, 7:34 pm
அரசு மீது அதிருப்தி.. காசோலையை திருப்பி கொடுக்க திட்டம் : சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவிய எலி வளை தொழிலாளர்கள் முடிவு?!!
மலைமாநிலம் என அழைக்கப்படும் உத்தரகாண்ட்டில், உத்தரகாசி மாவட்டத்தில் அமைக்கப்படும் சாலை பணிகளின் தொடர்ச்சியாக எண்-134 தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா வளைவு – பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது.
கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் இதன் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சுரங்க நுழைவாயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். 17 நாட்களுக்கு பிறகு பெரும் போராட்டத்திற்கு பிறகு அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தொழிலாளர்கள் மீட்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது எலி வளை தொழிலாளர்களின் முயற்சிதான். 21 மணி நேரத்தில் 13 மீட்டர் தூரம் வேகமாக சுரங்கத் தோண்டி இரும்பு குழாய்களை வெற்றிகரமாக பொருத்தினர். இதனால் தான் 17 நாட்களுக்கு பின் அனைத்து தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர்.
உலகம் முழுவம் இந்த செய்தி பரவிய நிலையில், அன்றைய நாள் எலி வளை தொழிலாளர்கள் ஹீரோவாக பொற்றப்பட்டனர். அதே போல எலி வளை சுரங்க தொழிலாளர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி.
ஆனால் இந்த காசோலையை பணமாக மாற்ற தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அவர் கூறியதாவது, முதலமைச்சரின் இந்த செயலை பாராட்டுக்குறியது. ஆனால், எங்களுக்கு வழங்கப்பட்ட தொகையில் திருப்தியில்லை. இந்த மீட்புப் பணியில் எலி வளை சுரங்கத் தொழிலாளர்களின் பங்கு அளப்பரியது. ஆனால், அரசாங்கத்திடமிருந்து பெற்ற தொகை போதுமானதாக இல்லை. அதனால், 12 தொழிலாளர்களும் அந்தக் காசோலைகளைப் பணமாக்க வேண்டாம் என்று கூட்டாக முடிவெடுத்திருக்கின்றனர்.
இது குறித்து மேலும் ஒரு தொழிலாளி கூறும் போது, சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை மீட்பதற்காக, உண்மையில் மரணத்தின் வாய்க்குள் நுழைந்தோம் நாங்கள். மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக, எங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் ஒரு வார்த்தைகூட கேட்காமல் இறங்கினோம். 50 ஆயிரம் என்பது சிறிய தொகை. நிரந்தர வேலையோ அல்லது இருப்பதற்கு ஒரு வீடு கொடுத்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும் என கூறியுள்ளனர்.