2024 லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. 272 தொகுதிகளில் வென்றால், ஆட்சியைப் பிடிக்க முடியும். இந்த நிலையில், 2024 லோக்சபா தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்துள்ளது. அதாவது, ஆளும் பாஜக கூட்டணி 350 முதல் 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறிப்பட்டது.
ஆனால், தேர்தல் முடிவு வேறு விதமாக அமைந்துள்ளது. தற்போதைய, சூழலில் பாஜக 235 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. கூட்டணி கட்சிகளை சேர்த்தால் பாஜகவின் கூட்டணி 294 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மாறாக இந்தியா கூட்டணிக்கு 200க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை உள்ளது. அதன்படி, காங்கிரஸ் 98 இடங்களில் மம்தா பானர்ஜியின் திரணாமுல் காங்கிரஸ் 31 இடங்களிலும் திமுக 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. அதை போல் அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாதி கட்சி 33 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இது தவிர பிற கூட்டணி கட்சிகளை சேர்த்து பார்த்தால் இந்தியா கூட்டணிக்கு 232 தொகுதிகள் முன்னிலையில் இருக்கிறது.
இதனால், தற்போதைய சூழ்நிலையில், மத்தியில் ஆட்சியைப் பிடிக்க எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை இல்லை. அதனால், பாஜகவும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களும் எதிரெதிரே கூட்டணியில் இருந்து ஆட்களை இழுத்து வருவதற்கான வேலைகளை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தான் கிங்மேக்கராக சந்திரபாபு நாயுடு மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் தான், சந்திரபாபு நாயுடுக்கு கர்நாடக துணை முதல்வர் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்மான டி.கே சிவக்குமார் போனில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, பாஜக உடனான கூட்டணியை முறித்து இந்தியா கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அதோடு மத்தியில் ஆளும் கட்சியாக இந்தியா கூட்டணி பொறுப்பேற்கும் போது மத்திய அமைச்சரவை முக்கிய இலாக்காவை தருவதாக தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது, டி கே சிவக்குமாறும் சந்திரபாபு நாயுடு விடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருப்பாரா இல்லாவிட்டால் இந்தியா கூட்டணிக்கு எஸ்கேப் ஆவாரா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.