திருப்பதி மலையில் திமுக அமைச்சர் : எம்எல்ஏவுடன் சாமி தரிசனம் செய்த அன்பில் மகேஷ்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2022, 12:45 pm

ஏழுமலையான் கோவிலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழகத்தில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளில் ஒன்று திமுக. ஆரம்பத்தில் இருந்து பெரியாரின் கொள்கை வழியில் பின்பற்றி வரும் திமுக கடவுளை வணங்குவதில்லை.

ஆனால் கருணாநிதி மறைவுக்கு பின் திமுகவின் கொள்கை காற்றில் பறந்து வருகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்.

அதே போல முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்களும், திமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கோவில் குளங்களுக்கு சென்று வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை விஐபி தரிசனத்தில் சாமி கும்பிட்டார்.

தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் அவருக்கு வேத ஆசி, தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் ( தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்) உடனிருந்து அமைச்சருக்கு சுவாமி தரிசனம் செய்து வைத்தார்.

  • ajith kumar next movie directed by sukumar அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?