நட்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரிஞ்சுக்கோ.. ப்ளீஸ் என்ன விடு : காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2022, 9:56 pm

தெலுங்கானா : காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணை கத்தியால் குத்தி படுகாயப்படுத்திய இளைஞரை கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் நலகொண்டாவை சேர்ந்த வாலிபர் ரோகித். அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவனுடன் ரோகித் நட்பாக பழகி வந்தான்.

இந்த நிலையில் அந்தப் பெண் மீது ரோகித்திற்கு காதல் ஏற்பட்டது. தன்னுடைய காதலை ரோகித் பலமுறை அந்த பெண்ணிடம் தெரிவித்தார். ஆனால் அந்த இளம் பெண் ரோகித் காதலை ஏற்கவில்லை.

இந்த நிலையில் நேற்று மதியம் தன்னுடைய நண்பர் ஒருவர் மூலம் அந்த இளம் பெண்ணை அங்குள்ள ராம்நகர் பார்க் பகுதிக்கு வரவழைத்தான் ரோகித்.

அங்கு அந்த இளம் பெண்ணுடன் அவன் பேசி கொண்டிருந்தான். அப்போது தனது நண்பரிடம் நான் இந்த பெண்ணிடம் தனியாக பேச வேண்டுமென்று அழைத்து சென்றான் ரோகித்.

அப்போது தான் ஏற்கனவே திட்டமிடப்படி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த இளம் பெண்ணின் கை, கால், முதுகு ஆகிய இடங்களில் குத்தினான்.

இதனால் மயங்கி சரிந்த அந்த பெண் துடிதுடித்து கொண்டிருந்த நிலையில் அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ரோகித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 691

    0

    0