நீ என்னை லவ் பண்றியா? இல்ல அவனையா? லவ் டார்ச்சர் : விரக்தியடைந்த இளம்பெண் விபரீத முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan11 July 2024, 5:10 pm
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மடுகுலப்பள்ளி மண்டலம் சிந்தலகுடத்தை சேர்ந்த கோட்டா ராமலிங்கம், ராஜிதலா தம்பதியின் மகள் கோட்டா கல்யாணி (19) படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தற்போது வீட்டில் உள்ளார்.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த அரூரி சிவா மற்றும் கொம்மனபோயினமது ஆகிய இருவரும் ஒருதலை காதல் என்ற பெயரில் கல்யாணியை தொடர்ந்து சில காலமாக துன்புறுத்தி வந்துள்ளனர்.
தங்கள் இருவரில் யாரையாவது காதலிக்கவில்லை என்றால் கல்யாணி புகைப்படங்களை இணைத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் இம்மாதம் 6ம் தேதி திப்பட்டி மண்டலம் சர்வாரம் கிராமத்தில் உறவினர் ஒருவர் இறந்த நிலையில் கல்யாணியின் பெற்றோர் அங்கு சென்றனர்.
கல்யாணி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மது , சிவா போன் செய்து கல்யாணிக்கு தொல்லை கொடுத்தனர். இதனால் வெறுப்படைந்த கல்யாணி விவசாயத்திற்காக வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மிரியாலகுடா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நல்கொண்டாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மூன்று நாள் சிகிச்சைக்குப் பிறகு கல்யாணி செவ்வாய்கிழமை இறந்தார். இதுகுறித்து கல்யாணி தாய் ராஜிதா அளித்த புகாரின் பேரில் மாடுகுலப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
புதன்கிழமை பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கல்யாணியின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நீதி வழங்கக் கோரி, குக்கடம் அட்டாக்கி – நார்கட்பள்ளி சாலையில் இறந்தவரின் உறவினர்கள் சடலத்துடன் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
கல்யாணி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது மரண வாக்குமூலம் நீதிபதியிடம் எடுத்துக் கொள்ளப்பட்டதால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று போலீசார் கூறியதையடுத்து கல்யாணி உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் மரண வாக்குமூலத்தில் தனது பெயரும் கல்யாணி தெரிவித்து இருப்பதை அறிந்த மது தாணும் அதிக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவாவை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.