ஆந்திரா : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரிலிருந்து 12 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மருத்துவர் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் காலுரு – சிப்பகிரி இடையே கல்லேவாகு நீரோடையில் காருடன் அடித்துச் செல்லப்பட்ட மருத்துவர் 12 மணி நேரத்திற்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு உயிருடன் மீட்கப்பட்டார்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. திடீர் மழை காரணமாக ஏரிகள் குட்டைகள் நிரம்பி பல்வேறு பகுதிகளில் உள்ள நீரோடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று கர்னூல் மாவட்டம் காலுரு – சிப்பகிரி இடையே கல்லேவாகு நீரோடையில் ஒட்டியுள்ள சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது திடீரென மழை வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து சக வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் காரை தேடும் பணியில் ஈடுபட்டனர் இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கார் நீரோடையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டு சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்தவரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
பெங்களூரிலிருந்து ஆதோனி மீதாக குல்பர்கா சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்த காரில் சிக்கியிருந்த மருத்துவர் டாக்டர் ஷாகித் அன்சாரி பத்திரமாக மீட்ட பேரிடர் மீட்பு குழு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.