22 பேருக்கு மட்டும் கடவுள் என சொல்லிக் கொள்ளும் மோடி வேலை செய்கிறாரா? ராகுல் காந்தி விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2024, 2:46 pm

கடவுள் என் அனுப்பியதாகவும், தான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என மோடி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தார்.

இது குறித்து விமர்சனம் செய்துள்ள ராகுல் காந்தி, டெல்லியில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், நமது நாட்டின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தாந்தத்தையும் சிந்தனையையும் நமது அரசியலமைப்பு பிரதிபலிக்கிறது. ஆனால், அரசியல் சாசனத்தை அழிப்பதாக பாஜக கூறுகிறது.

தன்னை கடவுள் அனுப்பியதாக மோடி கூறுகிறார். கொரோனா காலகட்டத்தில் மக்கள் இறந்து கொண்டிருக்கும்போது, செல்போனில் டார்ச் அடிக்கச் சொன்னார். கடவுள் எப்படிப்பட்ட மனிதரை அனுப்பியுள்ளார்?

மேலும் படிக்க: வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடியிடம் ஆஜரான ஆயுதப்படை பயிற்சி காவலர் . விசிக திடீர் எதிர்ப்பு : போலீசார் குவிப்பு!

தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி 22 தொழிலதிபர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார். அம்பானி, அதானியின் விருப்பத்தின் பேரிலேயே பிரதமர் அனைத்தையும் செய்கிறார், ஏழைகளுக்கு சாலைகள், மருத்துவமனை, கல்வி குறித்து கோரிக்கை வைத்தால் மோடி எதுவும் செய்வதில்லை என விமர்சித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!