PET CLINIC-ல் வளர்ப்பு நாய் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் ; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ… ஊழியர்கள் 2 பேர் கைது..!!!

Author: Babu Lakshmanan
14 February 2024, 8:02 pm

மகாராஷ்டிராவில் வளர்ப்பு நாய் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய பெட் க்ளீனிக்கை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ஆர் மால் பகுதியில் VETIC எனும் பெட் க்ளீனிக் செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்களுக்காக ஏராளமான வளர்ப்பு நாய்களை அதன் உர்மையாளர்கள் அழைத்து வருகின்றனர்.

அந்த வகையில், CHOW CHOW என்ற இனத்தைச் சேர்ந்த வளர்ப்பு நாயை அதன் உரிமையாளர் க்ளீனிக் கிற்கு அழைத்து வந்தார். அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இருவர் அந்த நாயின் முகத்தின் மீது பலமுறை குத்தியுள்ளார். மேலும், உடம்பு உள்ளிட்ட பகுதிகளிலும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனை அங்கிருந்த மற்றொரு ஊழியர் வீடியோ எடுத்துக் கொண்டே, அவரும் அந்த நாயை தாக்கியுள்ளார்.

இதனை அங்கிருந்த உரிமையாளர் பார்த்து அதிர்ச்சிக்குள்ளானார். பின்னர், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு ஊழியர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதனிடையே, இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் நாய் ஆர்வலர்கள் மற்றும் பெட் லவ்வர்ஸ்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

  • Viveks Twin Daughterநடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
  • Views: - 410

    0

    0