லிஃப்டில் சிறுவனை கடித்த நாய் : வலியால் துடித்தும் கண்டுகொள்ளாத உரிமையாளர்.. வைரலான வீடியோவால் பாய்ந்தது நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2022, 7:05 pm

உ.பி.,யில் தான் கொண்டு வந்த வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவன் வலியால் துடித்த போதும் கண்டு கொள்ளாமல் இருந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உ.பி., மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், லிப்ட்டில் சிறுவன் ஒன்று நின்று கொண்டிருந்தான். அப்போது, பெண் ஒருவர் வளர்ப்பு நாயுடன் உள்ளே வந்தார்.

நாயை பார்த்த பயத்தில் சிறுவன் முன்னே, அமைதியாக சென்றான். ஆனால், அந்த நாய் சிறுவனின் காலை கடித்தது. இதனால், அந்த சிறுவன் கடிபட்ட இடத்தில் கையால் தேய்த்தபடி வலியால் துடித்து கதறினான்.

ஆனால், நாய் உரிமையாளரோ தனக்கு எதும் தெரியாதது போல் கண்டும் காணாமலும் இருந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.


சிறுவனின் பெற்றோரும் காசியாபாத் போலீசில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?