மணக்கோலத்தில் மயங்கிய விழுந்த பெண்…மூளைச்சாவு அடைந்த சோகம்: பெற்றோர் செய்த செயலுக்கு குவியும் பாராட்டு..!!

Author: Rajesh
12 February 2022, 2:05 pm

கர்நாடகா: மணக்கோலத்தில் மயங்கி விழுந்து மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலை பெற்றோர் தானமாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் மணக்கோலத்தில் மயங்கி விழுந்த பெண் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெண்ணின் குடும்பத்தினர் தீரா துயரத்திலும், அவரது உடல் உறுப்புகளை தானமாக அளித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த தகவலை ட்விட்டரில் கர்நாடக அமைச்சர் சுதாகர் பதிவிட்டுள்ளார். கோலார் மாவட்டத்தின் சீனிவாசப்பூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது சைத்ரா என்ற பெண்ணின் திருமண வரவேற்பில் இந்த சோக நிகழ்வு நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சைத்ரா, மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், இதயத்தை நொறுக்கும் துயரத்திற்கு இடையிலும் மகளின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்க முன்வந்ததாக அமைச்சர் சுதாகர் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?