திருப்பதி கோவிலுக்கு மின்சார ஸ்கூட்டர்கள் நன்கொடை : 25 வாகனங்களை வழங்கியது டிவிஎஸ் நிறுவனம்!!
Author: Udayachandran RadhaKrishnan22 July 2022, 2:27 pm
திருப்பதி : ரூ 30 லட்சம் மதிப்புடைய 25 மின்சார ஸ்கூட்டர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியது டிவிஎஸ் நிறுவனம்.
டிவிஎஸ் நிறுவனம் மின்சாரம் மூலம் இயங்கும் 25 ஸ்கூட்டர்களை இன்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியது.

டிவிஎஸ் நிறுவனம் தயாரித்த மின்சார ஸ்கூட்டர் மாடல்களில் ஒரு மாடலை சேர்ந்த 25 மின்சார ஸ்கூட்டர்கள் திருப்பதி மலைக்கு கொண்டுவரப்பட்டன.
அவற்றுக்கு ஏழுமலையான் கோவில் எதிரில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ஸ்கூட்டர்களின் சாவிகள், ஆவணங்கள் ஆகியவற்றை நிறுவனத்தின் பிரதிநிதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டியிடம் ஒப்படைத்தார்.