ஆபிசுக்குள் புகுந்து உயர் அதிகாரிகளை ஆத்திரம் தீர வெட்டிக் கொன்ற முன்னாள் ஊழியர்… பெங்களூரூவை உலுக்கிய சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
12 July 2023, 11:41 am

அலுவலகத்திற்குள் புகுந்து MD மற்றும் CEO-வை முன்னாள் ஊழியர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஏரோனிக்ஸ் இன்டர்நெட் எனும் நிறுவனத்தில் ஃபெலிக்ஸ் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். ஆனால், அவரது பணியில் திருப்தியில்லாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு
அவரை பணியில் இருந்து மேலாண்மை இயக்குநராக ஃபனீந்திர சுப்ரமணியம் என்பவரும், தலைமை நிர்வாக அதிகாரியாக வினு குமார் ஆகியோர் நீக்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, ஃபெலிக்ஸ் சொந்தமாக தொழில் ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளார். அவரது நிறுவனத்திற்கு வரும் ஆர்டர்களை, ஏரோனிக்ஸ் இன்டர்நெட் நிறுவனம் தட்டிப் பறித்ததாக சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஃபெனிக்ஸ், நேராக தான் பணியாற்றிய நிறுவனத்திற்கு சென்று, மேலாண்மை இயக்குநர் ஃபனீந்திர சுப்ரமணியம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வினு குமார் ஆகியோரை சந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இருவரிடமும் பேசிக்கொண்டே இருக்கும்போது, எதிர்பாராத விதமாக ஃபெலிக்ஸ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய ஃபெலிக்ஸை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

தொழல் போட்டியால் நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகளை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 382

    0

    0