நகை, பணம் கொள்ளையடிக்க இரட்டைக்கொலை : பிரபல ஓட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி படுகொலை.. போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
28 August 2022, 5:51 pm

ஹோட்டல் நடத்தி வரும் கிருஷ்ணா என்பவர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி பத்மா ஆகியோரை கொலை செய்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

கிருஷ்ணா என்பவர் நெல்லூர் நகரில் ஸ்ரீராம் கேன்டீன் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று இரவு அவருடைய வீட்டுக்கு சென்ற கொள்ளையர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது அங்கு கிருஷ்ணா இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருடைய மனைவி பத்மாவை கொலை செய்து வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளை அடித்துக் கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில் அங்கு வந்த கிருஷ்ணா கொள்ளை நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரையும் படுகொலை செய்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பணம், பொருள், நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
நெல்லூரில் நடைப்பெற்ற இரட்டை கொலை மற்றும் கொள்ளை ஆகியவை தொடர்பாக வழக்கப்பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!