விவசாயிகளுக்கு தொகை இரட்டிப்பு? ஒப்புதல் அளித்தது அமைச்சரவை? சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல்!
Author: Udayachandran RadhaKrishnan1 February 2024, 10:38 am
விவசாயிகளுக்கு தொகை இரட்டிப்பு? ஒப்புதல் அளித்தது அமைச்சரவை? சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல்!
நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் அடுத்த நிகழ்வாக இன்று பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதியமைச்சகத்தில் இருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புறப்பட்டார். காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். 6-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் மீதான வரி குறைப்பு, பெண்களுக்கான நிதி உதவி திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
0
0