மோடியின் ஆரிய மாடலை வீழ்த்தக்கூடிய சரியான ஆயுதம் திராவிட மாடல்தான் : ஆ. ராசா பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 July 2023, 9:26 am

திருச்சியில் நடைபெற்ற வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளர் திமுக எம்.பி.ஆ.ராசா பேசுகையில்;- பெண் என்றால் பேய் கூட இரங்கும் பேய் கூட இரங்க வேண்டிய பெண்மைக்காக மோடி இரங்கவில்லை என்றால் பேயைவிட மோசமானவரா என்று கேள்வி இன்றைக்கு இந்தியாவில் எழுந்துள்ளது.

ஒரு பக்கம் ஊழல், ஒரு பக்கம் எதேச்சரிகாரம், மற்றொரு பக்கம் மதவாதம். இவை எல்லாம் சேர்ந்த பாஜக திமுகவை பார்த்து சொல்கிறது இது ஊழல் கட்சி, குடும்ப ஆட்சி என்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்திருக்கிற அரசியல் களம்தான் பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பப் போகிறது.

மோடியை எதிர்த்து வட மாநிலங்களில் ஒரு பெரும் படையே திரண்டு கொண்டிருக்கிறது. ஆனால் மோடி என்ற மதவாதத்தை வீழ்த்த வேண்டும் என்றால் படை மட்டும் இருந்தாலோ அல்லது தலைவன் மட்டும் இருந்தாலோ போதாது.

தத்துவம் இருக்க வேண்டும். அந்த தத்துவம் இருக்கின்ற இடம் இந்தியாவிலேயே ஒரு இடம் தமிழ்நாடு மட்டும் தான். பெரியார், அண்ணா, கலைஞர் புகட்டிய நமது திராவிட தத்துவம் மோடியை வீழ்த்தக்கூடிய சரியான ஆயுதம். மோடி எனும் ஆரிய மாடலை பெரியாரின் திராவிட மாடலால் தான் வீழ்த்த முடியும் என என்றார்.

மேலும், பாலின சமத்துவத்தை உருவாக்குவதற்காக, பெண்களின் பங்களிப்பை ஆண்கள் உணர வேண்டும், மதிக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின் என ஆ.ராசா பேசியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 389

    0

    0