இளம்பெண்ணை நிர்வாணமாக நிற்க வைத்த போதை ஆசாமி.. 15 நிமிடம் நடைபாதையில்… ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி…!!

Author: Babu Lakshmanan
9 August 2023, 12:51 pm

ஜவுளிக்கடைக்கு சென்று விட்டு திரும்பிய 28 வயது இளம்பெண்ணின் ஆடைகளை நீக்கி நிர்வாணமாக நிற்க வைத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு ஆந்திர மாநிலம் ஐதராபாத் ஜவகர் நகர் பகுதியில் இருக்கும் துணிக்கடையில் இருந்து 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வெளியே வந்துள்ளார். அப்போது, அந்த வழியில் மதுபோதையில் மாரய்யா (38) என்பவர் நின்று கொண்டிருந்தார்.

அவர் அந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் கோபமடைந்த இளம்பெண், மாரய்யாவை தாக்க முற்பட்டார். பதிலுக்கு ஆத்திரமடைந்த மாரய்யா, இளம் பெண்ணின் ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கினார்.

அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற பெண் ஒருவர் இந்த சம்பவத்தை கண்டு வாலிபரை தடுக்க முயற்சித்தார். அவரையும் வாலிபர் தாக்கினார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட இளம்பெண் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியம் குடிபோதையில் இருந்த மாரய்யா, அவரை சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக நடைபாதையில் நிர்வாணமாக நிற்க வைத்தார். அதோடு, பாலியல் தொந்தரவும் கொடுத்தார். இதனை தடுக்காமல் அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன் வரவில்லை.

இதையடுத்து, போதை ஆசாமி அங்கிருந்து கிளம்பியதும், சிலர் அருகில் இருந்த பிளக்ஸ் பேனர்களை எடுத்து அந்த இளம்பெண்ணை மூடினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி, மாரய்யாவை கைது செய்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 413

    0

    0