‘என்னை அடிச்ச போலீஸ் உயிரோடு இல்ல’… போதையில் உறுமிய வாலிபர் ; போதை தெளிந்ததும் நடந்த சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
23 August 2022, 8:55 pm

என்னை அடித்த போலீசார் உயிருடன் இல்லை என்று குடிபோதையில் வாலிபர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக எல்லையை ஒட்டிய கேரள மாநிலத்திற்குட்பட்ட வெள்ளறடா பகுதியை சேர்ந்த சைவின் என்பவரை போலீசார் திருட்டு வழக்குகளில் கைது செய்தனர். திருச்சூர் நகரில் உள்ள சில வீடுகளில் திருடச் சென்றபோது பிடிபட்டார். குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

திருச்சூர் மாவட்ட மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. போதையில் இருந்த திருடன் சைவின், காவல்துறை அதிகாரிகளை கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்தார். வெளியே வந்தால் காவல்துறை அதிகாரிகளை கொன்று விடுவதாக மிரட்டினார்.

“என்னை அடித்த போலீஸ்காரர்கள் யாரும் உயிருடன் இல்லை சார். உண்மையாக, யாரும் உயிருடன் இல்லை. திருவனந்தபுரத்தில் ஒரு இடம் உண்டு. விழிஞ்ஞம் காவல் நிலையத்திற்கு சென்று திரும்பி வரவே இல்லை. எத்தனை போலீசார் கொல்லப்பட்டனர்?,” இவ்வாறு வீர வசனம் பேசினார், குழந்தைகளே, விளையாடாதீர்கள், நீங்கள் வீட்டில் இருக்க மாட்டீர்கள், என சவால் விட்டார்.

மறுநாள் போதை இறங்கியவுடன், போலீசிடம் மன்னிப்பு கேட்டார். திருச்சூர் கிழக்கு ஸ்டேஷன் போலீசார், அந்நியன் திரைப்படத்தில் விக்ரமின் கதாபாத்திரமான ‘அன்னியன், அம்பி’ ஆகிய இரு வேறு தோற்றம் கொண்ட ஒருவனை பார்த்தனர். அவர் குடிபோதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் முன், பணிவுடன் இருந்த சைவின், மது போதையில் இருப்பதாக கூறி கதறி அழுதார். அந்த வீடியோவில், தான் குடிபோதையில் இருப்பதாகவும், ஒருவரைக் கொல்லும் தைரியம் தனக்கு இல்லை, என்றும் அந்த இளைஞர் கூறுவதைக் காணலாம். திருட்டு முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 625

    0

    0