நடுரோட்டில் போதையில் பாக்ஸிங் செய்த நபர்கள் ; கடைசி நேரத்தில் என்ட்ரி கொடுத்த போலீசார்… வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
12 June 2023, 9:54 pm

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் இருவர் சாலையில் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகிறது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே ஊராட்சி உண்டு நகரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள சாலையில் போதையில் இருவர் மோதிக்கொண்டனர். சினிமா ஷூட்டிங் போல் நடந்த இந்த மோதல் காட்சிகளை அருகில் இருந்த நபர் ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார்.

ரம்சாத் – ரஷீத் ஆகிய இருவர் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சனை வாய் தகராறில் துவங்கி அடிதடியில் முடிவடைந்தது பொதுமக்கள் பார்வையாளர்கள் போல சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருக்க, இருவரும் நீண்ட நேரம் மோதி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்றாலும் பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் சண்டையிட்டதால் இருவரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது

  • Ethirneechal Serial Fans are shocked and stop to watch என்ன கொடுமை இது ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதையே நிறுத்திட்டேன்!