போதையில் சொகுசு கார் ஏறி 2 பேர் உயிரிழப்பு… 17 வயது சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் கிடைத்த ஜாமீனால் சர்ச்சை…!!

Author: Babu Lakshmanan
20 May 2024, 9:36 pm

புனேவில் மது போதையில் சொகுசு காரை இயக்கி இருவரின் உயிரிழப்புக்குக் காரணமான 17 வயது சிறுவனுக்கு வெறும் 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட சம்பவம் பல்வேறு விமர்சனங்களை எழச் செய்துள்ளது.

புனேவின் கல்யாணி நகர் பகுதியில் நேற்று அதிகாலை அதிவேகமாக வந்த Porsche கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரவு பார்ட்டி முடிந்து போதையில் அந்த காரை ஓட்டி வந்த 17 வயது சிறுவனை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் காவலர்கள் வசம் ஒப்படைத்தனர். பத்தை ஏற்படுத்திய சிறுவன் புனேவை சேர்ந்த பிரபல கட்டுமான தொழிலதிபரின் மகன் என தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க: வள்ளியூருக்கு போகாது-னு ORDER வச்சு இருக்கீங்களா..? அடம்பிடித்த நடத்துநர்.. மல்லுக்கட்டிய பயணி…!!

தொடர்ந்து சிறார்களுக்கான நீதிமன்றத்தில் அந்த சிறுவன் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இந்நிலையில், நீதிமன்றம் அந்த சிறுவனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியுள்ளது. விபத்து ஏற்படுத்திய சில மணி நேரங்களில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அவருக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் கிடைத்துள்ளதாக அந்த சிறுவனின் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து காவலர்களுடன் 15 நாட்கள் பணியாற்ற வேண்டும், மனநல சிகிச்சை பெற வேண்டும், சாலை விபத்தின் விளைவு மற்றும் அதற்கான தீர்வு என்ற தலைப்பில் 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும், போதை ஒழிப்பு மையத்தில் கவுன்சிலிங் பெற வேண்டும், எதிர்காலத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நிபந்தனைகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 326

    0

    0