அடுத்தடுத்து நிலநடுக்கம்… ஒரே வாரத்தில் டெல்லியில் 2வது முறையாக உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதி!!!
Author: Udayachandran RadhaKrishnan5 January 2023, 10:01 pm
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புத்தாண்டின் முதல் நாளான நள்ளிரவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஹரியானா மாநிலத்தின் ஜாஜார் பகுதியை மையமாக கொண்டு உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கல் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
புத்தாண்டு பிறந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் அதாவது நள்ளிரவு 1.19 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
ஹரியானாவின் ஜாஜார் பகுதியில் இருந்து 12 கிமீ வடமேற்கில் 5 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாகவும் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் நவம்பர் 9, 12 ஆகிய தேதிகளில் டெல்லியிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் 9ஆம் தேதியன்று நள்ளிரவு 2 மணியளவில், டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள ஃபைசபாத்தில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு அடியில் 200 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8 மணியளவில் நில நடுக்கம் உணரப்பட்டது. காயங்கள் அல்லது சேதங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் டெல்லி-என்சிஆரைத் தாக்கியதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.