வேண்டுமென்றே இனிப்புகளை அள்ளி சாப்பிடும் கெஜ்ரிவால்… எல்லாம் இதுக்காக் தான் ; அமலாக்கத்துறை வாதம்!!

Author: Babu Lakshmanan
18 April 2024, 5:03 pm

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் பெறுவதற்கு வசதியாக சில வேலைகளை திட்டமிட்டே செய்து வருவதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வாதமிட்டுள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை 28ந்தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

மேலும் படிக்க: Gpay மூலம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்… அண்ணாமலை மீது திமுகவினர் பரபரப்பு புகார்

தற்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் பெறுவதற்கு வசதியாக சில வேலைகளை திட்டமிட்டே செய்து வருவதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வாதமிட்டுள்ளது.

அதாவது, கெஜ்ரிவால் ஜாமின் பெறுவதற்கு வசதியாக மாம்பழங்கள் மற்றும் இனிப்புகளை அதிகளவில் சாப்பிட்டு வருவதாகவும், அதன்மூலம் சர்க்கரை அளவை அதிகரித்து, அதனை காரணம் காட்டி அவர் ஜாமீன் பெற முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு கெஜ்ரிவால் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, கெஜ்ரிவாலுக்கு அளிக்கப்படும் உணவு குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி சிறைத்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!