10 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை மாதம் தேர்தல்… தேதியுடன் அறிவிப்பு வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2023, 9:52 pm

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டு உள்ள அறிவிப்பில், கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 10 நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள், வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஓய்வு பெறுகின்றனர்.

இதனை தொடர்ந்து, காலியாகவுள்ள அந்த 10 ராஜ்யசபை இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது. இதன்படி, கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளத்தில் 10 ராஜ்யசபை இடங்களுக்கான தேர்தல் வருகிற ஜூலை 24-ந்தேதி நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் வருகிற ஜூலை 24-ந்தேதி நடத்தப்படும். காலியாகவுள்ள இந்த இடங்களுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு வருகிற ஜூலை 13-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களில் தெரிக் ஓ பிரையன் (மேற்கு வங்காளம்) மற்றும் எஸ். ஜெய்சங்கர் (குஜராத்) உள்ளிட்டோர் முக்கியம் வாய்ந்தவர்கள் ஆவர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி