தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகளவில் நிதி பெற்ற அரசியல் கட்சிகளுக்கான விபரம் வெளியாகியுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கான நிதி திரட்டுவதற்காக தேர்தல் பத்திரங்கள் என்ற முறையை கடந்த 2018ம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரையில் பல்வேறு மதிப்புகளி தேர்தல் பத்திரங்கள் அங்கீரிக்கப்பட்ட எஸ்பிஐ வங்கி கிளைகளில் விற்பனை செய்யப்படும்.
தனிநபர்கள் அல்லது பெருநிறுவனங்கள் தாங்கள் விரும்பும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இந்த தேர்தல் பத்திரங்களை பெற்று நன்கொடை வழங்கலாம். இந்த நிலையில், தேர்தல் பத்திர முறைக்கு எதிராக கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தேர்தல் பத்திர முறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அதிரடியாக தீர்ப்பளித்தது.
மேலும், தேர்தல் ஆணையத்தின் மூலம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றவர்களின் விபரங்களை இணையதளத்திலும் உச்சநீதிமன்றம் வெளியிடச் செய்தது.
தேர்தல் பத்திரம் அதிகம் வாங்கிய டாப் 10 நிறுவனங்களின் பட்டியல்
ப்யூச்சர் கேமிங் மற்றும ஹோட்டல் சர்வீஸ் – ரூ.1,368 கோடி
மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ப்ஃராஸ்ட்ரக்சர் லிமிடெட் – ரூ.821 கோடி
குயிக் சப்ளை செயின் லிமிடெட் – 410 கோடி
ஹால்டியா எனர்ஜி லிமிடெட் – ரூ.377 கோடி
வேதாந்தா லிமிடெட் – 376 கோடி
எஸ்ஸல் மைனிங் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் – ரூ.225 கோடி
கெவெண்டர் ஃபுட்பார்க் இன்ப்ரா லிமிடெட் – ரூ.195 கோடி
மதன்லால் லிமிடெட் – ரூ.186 கோடி
பாரதி ஏர்டெல் குழும் – ரூ.183 கோடி
யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் -ரூ.162 கோடி
தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற நிதி விபரம்
பாஜக – ரூ.6,060.50 கோடி
திரிணாமுல் காங்கிரஸ் – ரூ.1,609.50 கோடி
காங்கிரஸ் – ரூ.1,421.90 கோடி
பாரத் ராஷ்ட்ர சமிதி – 1,214.70 கோடி
பிஜு ஜனதா தளம் – ரூ.775.50 கோடி
திமுக – ரூ.639 கோடி
அதிமுக – ரூ.6.10 கோடி
2019 முதல் 2024 பிப்ரவரி வரையில் 22,030 பத்திரங்கள் ரொக்கமாக மாற்றப்பட்டு அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
This website uses cookies.