காலியாகும் காங்கிரஸ் கூடாரம் : பாஜகவில் இணைகிறாரா காங்., எம்பி? பரபரக்கும் அரசியல் களம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 February 2024, 7:17 pm

காலியாகும் காங்கிரஸ் கூடாரம் : பாஜகவில் இணைகிறாரா காங்., எம்பி? பரபரக்கும் அரசியல் களம்!!!

காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருவது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அனந்த்பூர் சாஹிப் எம்பியாக உள்ள அவர், பாஜக சார்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகின.

அண்மையில் மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மணீஷ் திவாரியும் பா.ஜ.க.வில் சேரப்போவதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், இந்த தகவலை மணீஷ் திவாரியின் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது.

மணீஷ் திவாரி தனது தொகுதியில் இருக்கிறார். அங்கு வளர்ச்சிப் பணிகளை கவனித்து வருகிறார். நேற்று இரவு கூட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களது இல்லத்திலேயே தங்கியிருந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!