ஆங்கிலம் என்பது ஒரு தகவல் தொடர்புக்கான மொழியே : மிஷன் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2022, 8:51 pm

குஜராத் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து இம்மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்து வருகிறார்.

இன்று 2 நாட்கள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்றுள்ளார். காந்திநகர், ஜுகநாத், ராஜ்கோட், கேவடியா மற்றும் வியாரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு ரூ.15,670 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து காந்திநகரில் உள்ள அதலஜ் பகுதியில், குஜராத் அரசின் ‘சிறந்த பள்ளிகளுக்கான இயக்கம்’ என்ற திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

அப்போது பள்ளி வகுப்பறையில் மாணவன் ஒருவர் பாடம் நடத்த மாணவர்களுடன் அமர்ந்து ஆய்வு செய்தார். பின் பள்ளிகளில் வகுப்பறைகள், கணிணி ஆய்வகங்கள், பள்ளிகளின் கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்தும் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 440

    0

    0