என்னை சிறையில் அடைத்தாலும் மீண்டு வருவேன் : பாஜகவுக்கு முதலமைச்சர் மம்தா பதில்?!

Author: Udayachandran RadhaKrishnan
1 February 2024, 5:09 pm

என்னை சிறையில் அடைத்தாலும் மீண்டு வருவேன் : பாஜகவுக்கு முதலமைச்சர் மம்தா பதில்?!

மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க அரசு, எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. கம்பிகளுக்கு பின்னால் என்னை நிறுத்தினாலும் அதில் இருந்து மீண்டு வருவேன்.

லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க ஆர்வமாக இருந்தபோதிலும் எங்களது கோரிக்கைகளை அவர்கள் நிராகரித்து விட்டனர். அவர்கள் கூட்டணிக்கு உடன்படவில்லை.

தேர்தலில் பா.ஜ.க, வெற்றி பெற இடதுசாரி கட்சிகளுடன் காங்கிரஸ் உறவு வைத்துள்ளது. இடதுசாரி கட்சிகளுடன் உறவை முறித்து கொள்ளாமல் காங்கிரசுடன் கூட்டணி வைக்க முடியாது. இவ்வாறு மம்தா கூறினார்.

  • Trisha who became the heroine in one night ஒரே நைட்டுல ஹீரோயின் ஆன திரிஷா.. இதுதாங்க தலையெழுத்து!