பாஜகவில் இணைந்தார் முன்னாள் முதலமைச்சர்.. தென்னிந்திய அளவில் பொறுப்பு வழங்க திட்டம் ; அரசியலில் திடீர் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
7 April 2023, 12:57 pm

டெல்லி : ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார்.

தெலங்கானா மாநிலம் பிரிப்பதற்கு முன்பாக ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதலமைச்சராக இருந்தவர் நல்லாரி கிரண்குமார் ரெட்டி. காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதலமைச்சராக பதவி வகித்த அவர், அக்கட்சியில் இருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து, தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதையடுத்து, மக்கிய ஆந்திரா (ஒருங்கிணைந்த ஆந்திரா) என்ற கட்சி தொடங்கி ஆந்திர மாநிலம் முழுவதும் போட்டியிட்டார். ஆனால், ஒரு இடத்தில் கூட் வெற்றி பெற முடியவில்லை. அதன் பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இதனிடையே, மீண்டும் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாகவும், தென்னிந்திய அளவில் அவருக்கு உயர்பொறுப்பு கொடுக்க இருப்பதாக ஆந்திர அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரண் குமார் ரெட்டி, பாஜகவில் இணைந்துள்ளார். இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!