₹3.5 கோடிக்கு முட்டை பப்ஸ் வாங்கியதாக செலவு கணக்கு.. முன்னாள் முதலமைச்சரால் சர்ச்சை!
Author: Udayachandran RadhaKrishnan21 August 2024, 4:08 pm
ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ஆட்சியில் பொதுமக்களின் பணத்தை வீணடித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஜெகன் மோகன் முதல்வராக இருந்த போது வீட்டை விட்டு வெளியே வந்தால் ஒரு ஹெலிகாப்டரும் நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் பணியாளர்களும் இருக்க வேண்டும்.
மாவட்டங்களுக்கு சுற்று பயணம் சென்றால் பள்ளிகளை மூட வேண்டும்.
அந்த பகுதியில் சாலைகளில் போக்குவரத்து மாற்றம், மரங்களை வெட்ட வேண்டும். ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு வளையமாக இருக்க வேண்டும்.
யாரும் பார்க்காத வகையில் சாலையின் இருப்புறமும் திரைகள் கட்டப்பட வேண்டும். பொது மக்கள் கூட்டத்தை காண்பிக்க பல நூறு கிலோமிட்டர் தொலைவில் இருந்து ஆர்டிசி பேருந்துகள் மூலம் பொது மக்களை அழைத்து செல்லப்பட்டனர்.
இதனால் ஐந்தாண்டுகளாக பல விதமான விமர்சனங்கள் வந்தாலும் அவற்றை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் 2019 ம் ஆண்டு முதல் 2024 வரை ஜெகன்மோகன் ரெட்டி சொந்த வீடாக தாடேபள்ளி பேலஸ் இருந்தாலும் அதுவே முதல்வரின் முகாம் அலுவலகமாக செயல்பட்டு வந்தது.
இங்கு எக் பப்ஸ் ( முட்டை பப்ஸ் ) செலவமாக மட்டும் ஆண்டுக்கு ₹ 72 லட்சத்து 51 ஆயிரத்து 340 என ஐந்து ஆண்டுகளுக்கு ₹ 3 கோடியே 62 லட்சத்து 56 ஆயிரத்து 700 செலவு காண்பிக்கப்பட்டுள்ளது.
இதுதவீர டிபன், காபி இதர செலவுகள் தனி என சமூக வலைதளங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்டு பதிவு செய்துள்ளனர்.
இதனால் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயரை ஒரே இரவில் எக் பஃப்ஸ் ரெட்டி என தெலுங்குதேசம் கட்சி மாற்றி குறிப்பிட்டு சமூக வளைதளத்தில் பரப்பி வருகிறது.
2014 மற்றும் 2019 க்கு இடைப்பட்ட காலத்தில் சந்திரபாபு முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த நாரா லோகேஷின் ஸ்கேஸ் பற்றி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது.
இப்போது ஜெகன் மோகனை பஃப்ஸ் ரெட்டியை அழைத்து தெலுங்கு தேசம் கட்சி அதற்கு எதிராக பிரச்சாரம் செய்யத் தொடங்கி உள்ளது. ஜெகன் மோகன் வீடு ஐந்து ஆண்டுகளில் முதல்வர் முகாம் அலுவலகம் என்பதால் இங்கு நூற்றுக்கணக்கான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.
பொதுவாக டீயுடன் ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ஐந்து ஆண்டுகளில் ₹ 3.5 கோடி எக் பஃப்ஸ் செலவு காட்டியது விமர்சனத்துக்கு உள்ளாகிறது.
ஒரு நாளைக்கு 1000 முட்டை பப்ஸ் என்றால் தாடேபள்ளி ஜெகன் மோகன் பேலஸ் முட்டை பஃப் ஊழல் அதிர்ச்சியளிக்கிறது.
மாதத்திற்கு 30,000 முட்டை பஃப்ஸ் வரை சாப்பிட்டார்கள் என்ற வாதம் முன்னுக்கு வந்துள்ளது. ஜெகன் மோகன் ஆட்சியில் அனைத்து துறையிலும் ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில் உணவுப் பொருட்களை கடைசியில் விட்டு வைக்கவில்லை.
இது குறித்து கூட்டணி அரசு விரிவான விசாரணை நடத்தினால் மேலும் பல உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளதாக பலர் கூறுவருகின்றனர்.