”மோடியை கொலை செய்ய தயாரா இருங்க” : முன்னாள் அமைச்சரின் பேச்சால் பரபரப்பு.. போலீசார் அதிரடி ஆக்ஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 December 2022, 11:25 am

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் மந்திரி ராஜா படேரியா, பன்னா மாவட்டத்தில் உள்ள பவாய் என்ற நகரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது, மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டி விடுவார். மோடி மதம், சாதி, மொழியின் பெயரால் பிளவுபடுத்துவார். தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.

நீங்கள் அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினால், மோடியைக் கொல்வதற்கு தயாராகுங்கள். அவரை வீழ்த்துவதாக கருதி கொல்லுங்கள் என்று அவர் கூறி உள்ளார்.

அவரது பேச்சு வீடியோவாக பதிவாகி வைரலாகி வருகிறது. இதையடுத்து ராஜா படேரியா மீது மத்தியப் பிரதேச அரசு வழக்கு பதிவு செய்தது.

இந்த நிலையில் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் ராஜா பட்டேரியா கைது செய்யப்பட்டுள்ளார்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!