வீட்டில் வெடித்த குண்டு: கொல்லப்பட்ட முன்னாள் MLA மனைவி:போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணை….!!

Author: Sudha
11 August 2024, 12:53 pm

மணிப்பூர் சாய்குல் மாவட்டத்தின் முன்னாள் எம்எல்ஏ மனைவி மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள அவர் வீட்டில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் இறந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.59 வயதான முன்னாள் MLA மனைவி சாருபாலா ஹாக்கிப், மெய்தே சமூகத்தைச் சேர்ந்தவர்.

64 வயதான முன்னாள் எம் எல் ஏ யம்தோங் ஹாக்கிப் இரண்டு முறை சாய்குல் தொகுதியில் வெற்றி பெற்றார் – 2012 மற்றும் 2017 இல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.கணவன் மனைவி இருவரும் 2022 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு மாறினர்.

குண்டு வெடிப்பு சம்பவம்,வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடந்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார், ஆனால் சனிக்கிழமை அதிகாலையில் புகார் அளிக்கப்பட்டது.

வீட்டில் உள்ள குப்பைகளுக்கு மத்தியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று வைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார். குப்பைகளை எரித்தபோது, அது வெடித்துள்ளது.இதனால் முன்னாள் எம்எல்ஏ மனைவி உயிரிழந்தார். மற்ற அனைவரும் நலமாக உள்ளதாகவும் வேறு உயிரிழப்புகளோ, காயங்களோ இல்லை,” எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ. தனது மாமாவின் பேரன் ஒருவருக்கு அருகில் உள்ள நிலத்தை வாங்கியதால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 338

    0

    0