பீகாரில் பரபரப்பு.. பாஜக நடத்தும் செயற்குழு கூட்டம் : நடக்கும் அதிரடி மாற்றங்கள்.. அதிர்ச்சியல் INDI கூட்டணி!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2024, 10:00 pm

பீகாரில் பரபரப்பு.. பாஜக நடத்தும் செயற்குழு கூட்டம் : நடக்கும் அதிரடி மாற்றங்கள்.. அதிர்ச்சியல் INDI கூட்டணி!

பீகார் மாநில முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையும், 2020 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலையும் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார்.

அதன் பிறகு பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகினார். அதன் பிறகு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காக ‘இந்தியா’ கூட்டணியை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்தியா கூட்டணி கட்சிகளுடன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், காணொலி காட்சி மூலம் நடந்த இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

அதனைத்தொடர்ந்து, அவர் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க-வுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.

பீகார் மாநில பாஜக செயற்குழு கூட்டம் நாளை தொடங்கி இரண்டு நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநில பா.ஜ.க பொறுப்பாளர் வினோத் தாவ்டே நாளை பாட்னாவிற்கு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் அரசியலில் பரபரப்பான சூழல் நிழவி கொண்டிருக்கும் இந்த நிலையில் பாஜக செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 425

    0

    0