EXIT POLL அனைத்தும் பொய்.. மோடி பிரதமர் ஆனால் மொட்டை அடிப்பேன்.. ஆளுங்கட்சி எம்எல்ஏ சவால்!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2024, 10:58 am

மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு நேற்று (ஜூன் 1) மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன.

பாஜக 400 இடங்கள் என்பதை இலக்காக கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அனைத்து கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.

கடந்த 2019 தேர்தலில் பாஜக 333 இடங்களை கூட்டணியாக பிடித்தது. தற்போது 20 இடங்கள் கூடுதலாக பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பாஜக கூட்டணியால் 200 இடங்களை தாண்ட முடியாது என இந்தியா கூட்டணி கட்சிகள் தெரிவித்த நிலையில் கருத்துக்கணிப்பை மீறி இந்தியா கூட்டணியே வெற்றி பெறும் என்று அதன் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக… சிக்கிமில் பெரும்பான்மையுடன் ஆட்சி!

அந்த வகையில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏவுமான சோம்நாத் பாரதி எக்ஸிட் போல்கள் அனைத்தும் பொய்யாகி இந்தியா கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றும் அதைமீறி பாஜக வென்று பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தால் தனது தலையை மொட்டையடித்து கொள்வதாக தெரிவித்துள்ளதார்.

கருத்துக்கணிப்புகள் வெளியான பிறகு தனது எக்ஸ் பக்கதில் அவர், – மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனால் நான் எனது தலையை மொட்டை அடித்துக்கொள்வேன்.
எனது வார்த்தையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், 4 ஆம் தேதி அனைத்து எக்சிட் போல்களும் தவறானவை என்று நிரூபிக்கப்படும். பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக மாட்டார்.

டெல்லியில் 7 சீட்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் நாளை மறுநாள் (ஜூன் 4) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி