கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம்.. ஒரே ரயிலில் 2வது முறையாக தீ விபத்து : காரணம் யார்? தீவிர விசாரணை!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2023, 9:40 am

கேரள மாநிலம் கண்ணூர் ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை 1:25 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து ஏற்பட்டபோது, ரெயில் மூன்றாவது நடைமேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது. தீ விபத்தை கண்ட ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 3 தீயணைப்பு படை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் ஒரு பெட்டி முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்தது. 2 பெட்டிகளில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ரயிலில் தீ வைத்து மூன்று பேர் உயிரிழந்த நிலையில் சாருக் சைபி கைது என்ற நபர் கைது செய்யப்பட்டார். அவர் தீ வைத்த ரயிலில் மீண்டும் 2வது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தீ விபத்து காரணமாக இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து எதுவும் பாதிக்கப்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தால் கண்ணூர் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • Udit Narayan viral kiss video ரசிகைக்கு LIVE முத்தம்…மேடையில் பிரபல பாடகரின் லீலை…வைரலாகும் வீடியோ..!