பப்ஜி விளையாட்டில் தோல்வி…. சக நண்பர்கள் கிண்டல், கேலி : 9ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2022, 12:39 pm

ஆந்திரா : பப்ஜி விளையாட்டில் தோல்வியடைந்த சிறுவனை சக நண்பர்கள் கிண்டல் கேலி செய்ததால் தற்கொலை செய்து கொண்டான்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலி பட்டினத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரபு. பிரபு மற்றும் அவனது நண்பர்கள் ஆகியோர் தினமும் ஓரிடத்தில் ஒன்றுகூடி பப்ஜி கேம் விளையாடுவது வழக்கம்.

இன்று நடைபெற்ற விளையாட்டில் பிரபு தோல்வி அடைந்தான். இதனால் அவனை சக நண்பர்கள் கிண்டல் செய்தனர். இதனால் மனவேதனை அடைந்த பிரபு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இதுபற்றி தகவல் அறிந்த மசூலிப்பட்டினம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

பிரபு தற்கொலை காரணமாக அவனுடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 817

    0

    0