பெண் பத்திரிக்கையாளரின் தோளில் கை போட்டு சேட்டை.. பிரபல முன்னணி நடிகர் பகிரங்க மன்னிப்பு ; கைது செய்ய வலுக்கும் கோரிக்கை..!

Author: Babu Lakshmanan
28 October 2023, 2:38 pm

பெண் பத்திரிக்கையாளரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட மலையாள முன்னணி நடிகர் சுரேஷ் கோபி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் சுரேஷ் கோபி. இவர் தமிழில் தீனா, ஐ போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டே இருந்தாலும், மறுபுறமும் அரசியலிலும் ஜொலித்து வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்பு அதே ஆண்டில் பாஜகவில் இணைந்தார்.

அண்மையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடிகர் சுரேஷ் கோபி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அங்கு திரண்டிருந்த செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவர்களில் பெண் பத்திரிக்கையாளரும் தன் பங்கிற்கு கேள்வி கேட்டார். அப்போது, நடிகர் கோபி, அந்தப் பெண்ணின் தோள் மீது கை வைத்தபடியே பதிலளித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பத்திரிக்கையாளர், சுரேஷ் கோபியின் கையை தட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். பிறகு, மீண்டும் வந்து தனது கேள்விகளை தொடர்ந்தார். அப்போது, சுரேஷ் மீண்டும் அந்தப் பெண் பத்திரிக்கையாளரின் தோள்பட்டையில் கைது வைத்தபடி பதிலளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெண் செய்தியாளரிடம் சுரேஷ் கோபி அத்துமீறி நடந்து கொண்ட கேரளாவில் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் எழச் செய்தது.

மேலும், நடிகர் சுரேஷ் கோபி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என கேரள பத்திரிக்கையாளர்கள் சங்கம் வலியுறுத்தியது.

இந்த நிலையில், நடிகர் சுரேஷ் கோபி பகிரங்க மன்னிப்பு கேட்டு தனது ஃபேஸ்புக் பதிவு போட்டுள்ளார். அதில், பெண் பத்திரிகையாளரிடம் நான் கரிசனையுடன் நடந்து கொண்டதாகவும், பொது இடங்களில் இதுபோன்று ஒருபோதும் நடந்து கொண்டதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அந்த சம்பத்தின் போது பத்திரிகையாளர் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பதாகவும், தனது செயலால் அவர் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!