மகனின் நோட்புக்கில் ராஜினாமா கடிதம்… வைரலாகும் பிரபல நிறுவனத்தின் உயரதிகாரியின் செயல்…!!

Author: Babu Lakshmanan
22 December 2023, 5:57 pm

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு மிஸ் இந்தியா லிமிடெட் எனும் பெயிண்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ரிங்கு படேல் என்பவர் பொருளாதார அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்ய விரும்பிய அவர், நோட் பேப்பரில் தனது ராஜினாமா கடிதத்தை எழுதி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த 15ம் தேதி அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தில், சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

தனது மகனின் நோட் புத்தகத்தில் உள்ள பேப்பரை பயன்படுத்தியதுடன், அதனை போட்டோ எடுத்து அந்த நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அவரது ராஜினாமாவை அந்நிறுவனம் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரிங்கு படேலின் ராஜினாமா கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?