பண மோசடி புகாரில் சிக்கிய சூப்பர் ஸ்டாரின் மனைவி.. போலீசை நாடிய பிரபல தொழிலதிபர்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2023, 1:42 pm

பணமோசடி புகாரில் பிரபல முன்னணி நடிகரின் மனைவி சிக்கியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நடிகர் ஷாருக்கானின் மனைவியான கவுரி கான் பாலிவுட் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக உள்ளார். அதோடு பிரபல ஆடை வடிவமைப்பாளராகவும் உள்ளார்.

இவர் டிசைன்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் கவுரி கான் மீது மும்பையை சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஒருவர், போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து ஷாருக்கானின் மனைவி இந்திய தண்டனைச் சட்டம் 409 என்ற பிரிவின் கீழ் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். கவுரி கான் மீது புகார் அளித்த தொழிலதிபர் ஜஸ்வந்த் ஷா லக்னோவில் துல்சியானி கட்டுமான நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்காக முன்பணமாக ரூபாய் 86 லட்சம் கொடுத்து இருந்தார் என்றும் ஆனால் அவருக்கு அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் பிளாட்டை வழங்காமல் பணத்தையும் ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

ஜஸ்வந்த் ஷா, பிளாட் வாங்குவதற்காக முன்பணம் கொடுத்த நிறுவனத்தின் பிராண்டு அம்பாசிடர் ஷாருக்கானின் மனைவி கவுரி கான் தான் என்றும் இந்த பிளாட்டை வாங்குவதற்கு அவர் விளம்பரப்படுத்தியதால் தான் அந்த பிளாட்டை வாங்க முடிவு செய்து பணம் கொடுத்ததாகவும் தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.

லக்னோவின் சுஷாந்த் கோல்ப் சிட்டி பகுதியில் உள்ள துளசியானி கோல்ப் வியூவில் இந்த பிளாட் அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஜஸ்வந்த் ஷா புகாரின் அடிப்படையில் துல்சியானி கட்டுமான நிறுவனம் மற்றும் அதன் தலைமை எம்டி அனில் குமார், இயக்குநர் மகேஷ் துல்சியானி ஆகியோர் மீதும் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இதுகுறித்து ஷாருக்கானின் மனைவி கவுரி கானோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனமோ இதுவரை எந்த பதிலும் கூறவில்லை. ஷாருக்கான் மனைவி மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 442

    0

    0