உணவகங்களில் ‘மனிதநேயம்’ என்ற போர்டை மாட்டுங்க : யோகி அரசுக்கு எதிராக குரல் கொடுத்த பிரபல நடிகர்!

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2024, 2:17 pm

உத்தரபிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக அரசின் இந்த உத்தர இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில், “ஒவ்வொரு கடையிலும் ஒரே ஒரு பெயர்ப்பலகை தான் இருக்க வேண்டும். அது மனிதநேயம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!