3வது முறையாக கட்சி விட்டு கட்சி தாவும் பிரபல நடிகை… அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய டெல்லி பயணம்?!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2023, 11:35 am

பாஜகவில் சேரும் பிரபல நடிகை… அமித்ஷா முன்னிலையில் கட்சியில் இணைய டெல்லி பயணம்?!

தெலுங்கு திரையுலகில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. இவருக்கு தற்போது வயதாகிவிட்டதால் அம்மா வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் கடைசியாக தமிழில் நடித்த திரைப்படம் வாரிசு.

வம்சி இயக்கிய இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்தது மாபெரும் வெற்றியை ருசித்தது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்தார் ஜெயசுதா.

சினிமாவைப் போல் அரசியலிலும் ஆர்வம் கொண்ட ஜெயசுதா, கடந்த 2009-ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். அப்போது செகண்ட்ராபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார்.

இதையடுத்து 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த ஜெயசுதா, கடந்த 2016-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவினார். அந்த கட்சியில் மூன்று ஆண்டுகள் மட்டுமே பணியாற்றிய அவர், பின்னர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் கடந்த 2019-ம் ஆண்டு இணைந்தார்.

தற்போது அந்த கட்சியில் இருந்தும் விலக முடிவெடுத்துள்ள ஜெயசுதா, விரைவில் பாஜகவில் இணைய உள்ளாராம். அண்மையில் ஆந்திர மாநில பாஜக தலைவர் ஜி கிஷன் ரெட்டியை இதுதொடர்பாக சந்தித்து பேசி இருக்கிறார் ஜெயசுதா. அந்த சந்திப்பின் போது தான் பாஜகவில் இணைந்தால் செகண்ட்ராபாத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற நிபந்தனையையும் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு பாஜக தரப்பும் ஒத்துக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஒரு வாரமோ அல்லது 10 நாளிலோ டெல்லி செல்ல உள்ள ஜெயசுதா, அங்கு அமித் ஷா மற்றும் முக்கிய பாஜக தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளாராம்.

நடிகை ஜெயசுதா பாஜகவில் இணைய உள்ள செய்து தெலுங்கு ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவி வந்தாலும், இதுகுறித்து அவர் எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!