பிரபல நடிகை திடீர் கைது… அடுத்தடுத்து புகார் : போலீசார் அதிரடி ஆக்ஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2023, 6:55 pm

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராக்கி சாவந்த். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் விளங்கும் ராக்கி அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளிலும் சிக்கிக் கொள்பவர்.

இவர், தமிழ் சினிமாவில் கம்பீரம், என் சகியேஇ முத்திரை உள்ளிட்ட சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். 2019ஆம் ஆண்டு ரிதீஷ் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்ட அவர், கடந்த ஆண்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

சமீபத்தில், மைசூருவைச் சேர்ந்த ஆதில் கான் துரானியைக் காதலித்து ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் அவர் மீது விமர்சனம் எழுப்பப்பட்டது.

இந்தநிலையில், நடிகை ஷெர்லின் சோப்ரா குறித்து அவதூறு கருத்துகளை கூறியதாக ராக்கி சாவந்த் மீது ஷெர்லின் சோப்ரா போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகார் அளித்ததின் பேரில் வழக்கை பதிவு செய்த அம்போலி பகுதியை சார்ந்த போலீசார் ராக்கி சாவந்த் கைது செய்துள்ளனர். மாடல் அழகி, பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகையுமான ஷெர்லின் சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில், பாலிவுட் நடன கலைஞரான ராக்கி சாவந்த் கைது செய்யப்பட்டுள்ளார் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த டுவிட்டர் பதிவில், எப்ஐஆர்-ன் அடிப்படையில் ராக்கி சாவந்த்தை அம்போலி போலீசார் கைது செய்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகை ராக்கி சாவந்துக்கு 10 காதலர்கள் உள்ளனர் என வீடியோ வெளியிட்டதற்காக நடிகை ஷெர்லின் சோப்ரா மீது அவர் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu