டீச்சர் வேலைக்கு போன தனுஷ் பட நாயகி… ஆங்கிலத்தில் பாடம் கற்பிக்கும் வீடியோ வெளியாகி வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 January 2023, 4:51 pm

விஜய், தனுஷ், துல்கர் சல்மான் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த பிரபல நடிகை டீச்சர் பணியில் இருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை நித்யா மேனன் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி மாவட்டம் வரதையா பாளையத்தில் உள்ள கல்கி பகவான் ஆசிரமத்திற்கு வருவது வழக்கம்.

இந்த ஆண்டு அதே போல் கல்கி பகவான் ஆசிரமத்திற்கு வந்த அவர் அங்கு நடைபெற்ற சிறப்பு வகுப்புகளில் கலந்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் வரதயாபாளையம் அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் மலைவாழ் மக்கள் வசிக்கும் காலனிக்கு இன்று சென்ற அவர் அங்குள்ள அரசு ஆரம்ப பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆங்கில பாடம் நடத்தினார்.

https://vimeo.com/791120653

இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 538

    0

    0