ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கான பணப்பலன்கள் கட்டு… போனஸுக்கு ஆப்பு..? ரூட்டை மாற்றும் முன்னணி நிறுவனங்கள்…!!

Author: Babu Lakshmanan
26 August 2022, 1:13 pm

ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கான போனஸ் மற்றும் பணப்பலன்களை குறைக்க முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

பொதுவாக, பிற துறைகளை காட்டிலும் ஐ.டி. நிறுவனங்களில் வருமான உயர்ந்ததாகவே இருக்கும். வெளிநாடுகளை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனங்களில், பணப்பலன்கள் அந்தந்த நாடுகளைப் பொறுத்து மாறுபடும். எனவே, ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிவதை இளைஞர்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்தியாவில் மட்டும் லட்சக்கணக்கானோர் ஐ.டி. துறையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவின்‌ ஐ.டி. நிறுவனங்கள்‌ தங்களின் ஊழியர்களுக்கான போனஸை குறைக்க திட்டமிடுகின்றன. அமெரிக்க மற்றும்‌ ஐரோப்பிய வாடிக்கையாளர்கள்‌ பொருளாதார மந்தநிலையை எதிர்நோக்கி உள்ளதால்‌, அவற்றை சார்ந்துள்ள இந்திய நிறுவனங்களும்‌ ஊழியர்களுக்கான சலுகைகளை குறைக்க முடிவு செய்திருப்பதாகக்‌ கூறப்படுகிறது.

இந்தியாவின்‌ இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்‌ஃபோசிஸ்‌
லிமிடெட்‌,‌ விப்ரோ நிறுவனங்களும் இது தொடர்பான அறிவிப்பை தங்களின் ஊழியர்களிடம் தெரிவித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

மேலும், இனி கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலம் வேலைக்கு ஆட்களை எடுக்கும் முடிவையும் இந்த நிறுவனங்கள் கைவிட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Viveks Twin Daughterநடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
  • Views: - 1628

    0

    0