தீவிர சிகிச்சை பிரிவில் பிரபல பாம்பு பிடி வீரர் வாவா சுரேஷ் அனுமதி : கார் விபத்தில் படுகாயம்.. ஷாக் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2022, 7:47 pm

கேரளா மாநிலத்தின் பிரபல பாம்பு பிடி வீரர் வாவா சுரேஷ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாவா சுரேஷ் தனது டிரைவருடன் செங்கனூர் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கேரளா அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் – கொல்லம் நெடுஞ்சாலையில் தட்டத்துமலை என்ற பகுதியில் வைத்து ,கவன குறைவாக சாலையின் ஓரத்தில் இருந்து வந்த கார் ஒன்றை இடிக்காமல் இருப்பதற்காக – வாவா சுரேஷ் இன் டிரைவர் காரை வளைக்க முயன்ற போது கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த கேரளா அதி விரைவு அரசு பேருந்து கார் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் வாவா சுரேஷுக்கும் அவரது டிரைவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் இருவரையும் மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பாம்பு கடித்ததில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!