பிரபல இளம் நடிகர் விஷம் குடித்து தற்கொலை : இந்திய சினிமாவை உலுக்கும் அடுத்தடுத்து மரணங்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2023, 12:27 pm

பிரபல இளம் தெலுங்கு நடிகர் சரியான வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார்.

பிரபல தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா(33) இன்று காலை தற்கொலை செய்து கொண்டார். அவரது திடீர் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பல நட்சத்திரங்கள் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுதீர் வர்மா விசாகப்பட்டினத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இறுதிச் சடங்கு செவ்வாய்கிழமை விசாகப்பட்டினத்தில் நடைபெறும். குண்டனபு பொம்மா, நீக்கு நாகு டேஷ் டாஷ் மற்றும் செகண்ட் ஹேண்ட் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் சுதீர் வர்மா.

இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் கூறும் போது அவர் சமீபத்தில் வாய்புகள் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தார். அவர் நல்ல வாய்ப்புகளுக்காக சிறிது காலமாக போராடி வந்தார் என கூறினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!