RRR ரிலீசுக்காக கட்அவுட் வைத்த ரசிகர்கள் : ஆவலுடன் படம் பார்க்க காத்திருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2022, 1:08 pm

ஆந்திரா : ஆர்ஆர்ஆர் திரைப்படம் சிறப்புக் காட்சியைக் காண இருசக்கர வாகனத்தில் வந்த ரசிகர்கள் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,

ஆந்திர மாநிலம் வி கோட்டா மண்டலம் மற்றும் ரமகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் துர்கா (வயது 25), கங்காதர் (வயது 24), வினய் குமார் (வயது 26) ஆகியோர். தமிழ்நாட்டில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியான நிலையில் நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் தீவிர ரசிகர்களான இவர்கள் திரைப்படத்தை காண 2 இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு ஆந்திரா வந்துகொண்டிருந்தனர்.

வி கோட்டா மண்டலத்திலிருந்து தமிழ்நாடுக்கு செல்லும் சாலையில் பாபே பள்ளி மிட்டா என்ற இடத்தில் இரவு 12 மணி அளவில் இரு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று உரசி மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழக்க மற்ற மூன்றுபேரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குப்பம் பி.இ.எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆர்ஆர்ஆர் படம் பார்க்க ஆவலுடன் வந்த ரசிகர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!