பாதயாத்திரையின் போது மாரடைப்பால் மயங்கி விழுந்த விவசாயி : சிபிஆர் முதலுதவி அளித்து உயிரை காப்பாற்றிய காவலர்.. நெகிழ வைக்கும் காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan19 October 2022, 1:52 pm
ஆந்திர மாநிலம் தலைநகர் அமராவதிக்காக சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது நிலம் வழங்கிய விவசாயிகள் தொடர்ந்து அமராவதியை தலைநகராக அமைக்க வலியுறுத்தி இரண்டாவது கட்டமாக நிலம் வழங்கிய விவசாயிகள் அனைவரும் இணைந்து மாநிலம் முழுவதும் மகா பாத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பாத யாத்திரை கிழக்கு கோதாவரி மாவட்டம், கொவ்வூரில் இருந்து ராஜமகேந்திராவரம் சென்று கொண்டுருந்தபோது காமன் இந்தியா பாலத்தை கடக்கும்போது விவசாயி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் பி.வி. திரிநாத் மாரடைப்பு ஏற்படும் நோய்களுக்கு உடனடி முதலுதவியான சிபிஆர் செய்தார். அவருடன் மற்ற போலீசாரும் உதவி செய்து முழு முயற்சியுடன் அவரது உயிரைக் காப்பாற்றினார்.
மாரடைப்பில் மயங்கி விழுந்த விவசாயிக்கு துரிதமாக செயல்பட்டு சிபிஆர் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய இந்த சம்பவம் அங்கிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக மாறி வருவதோடு காவல்துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது .