புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பறிபோன விவசாயி உயிர் : கிராம மக்கள் மறியலால் தமிழக எல்லையில் போக்குவரத்து பாதிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2022, 4:25 pm

ஆந்திரா : விளைநிலத்தில் காவலுக்கு இருந்த விவசாயி யானை மிதித்து பலியான நிலையில் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் நீதி கேட்டு சாலை மறியல் செய்ததால் ஆந்திரா தமிழகம் இடையே போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் குடியாத்தம் சாலையில் விளைநிலத்தில் காவலுக்கு இருந்த விவசாயி சுப்பிரமணியம் ஒற்றை யானை மிதித்து பலியானார்.

விளைநிலத்தை காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இன்று அதிகாலை அவ்வழியாக வந்த ஒற்றை யானை சுப்பிரமணியன் மீது தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் படுகாயமடைந்த சுப்ரமணியம் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் சுப்ரமணியம் பலியானதற்கு நீதி கேட்டும் உடனடியாக சோலார் தடுப்பு வேலி அமைத்துத் தரக் கோரியும் சடலத்துடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக பலமனேர் தமிழ்நாடு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!