தலைநகரை திணற வைக்கும் விவசாயிகள்.. டெல்லி சலோ போராட்டம் : பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2024, 9:40 am

தலைநகரை திணற வைக்கும் விவசாயிகள்.. டெல்லி சலோ போராட்டம் : பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு!!

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய புதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறுகோரிக்கைகளை மத்திய அரசுக்குவலியுறுத்திய பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அன்று ‘டெல்லி சலோ ‘ என்ற பெயரில் டெல்லியை நோக்கி பேரணியை மேற்கொண்டனர்.

டெல்லியை நோக்கி விவசாயிகள் வருவதை தடுக்க டெல்லியை சுற்றியுள்ள எல்லைப் பகுதியில் காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். அந்த தடுப்புகளை மீறி விவசாயிகள் டெல்லி எல்லையில் உள்ளே வர முயன்றதால் அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கண்ணீர் புகை குண்டுகள் வீசும் நிலை உருவானது.

விவசாயிகள் டெல்லியை நோக்கி வருவதும் அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதால் டெல்லி எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் தான் இன்று விவசாயிகள் போராட்டத்தின் மூன்றாவது நாளில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், தற்போது இன்று வியாழன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிற உள்ளது . இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்த ராய் ஆகியோர் உடன் பல்வேறு விவசாய அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 328

    0

    0