இறுதிக்கட்ட தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு… காலை 9 மணி நிலவரம் : டாப்பில் இமாச்சல்.. கடைசியில் ஒடிசா!
Author: Udayachandran RadhaKrishnan1 June 2024, 10:29 am
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் 6 கட்ட தேர்தல் நிறைவடைந்தது.
7ஆம் கட்டம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. இன்று தொடங்கிய 7-ம் கட்ட தேர்தலில், பாஜக தேசிய தலைவரான ஜே.பி.நட்டா அவர்கள் தனது மனைவி மல்லிகா நட்டாவுடன் ஹிமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
மேலும், உத்தரபிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் சோரக்பூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மேலும், மக்கள் அனைவரும் காலை முதல் வரிசையில் நின்று பொறுப்புடன் வாக்களித்து வருகின்றனர்.
தற்போது, நடைபெற்று வரும் 7-ம் கட்ட தேர்தலில் 9 மணி அளவில் 11.31% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அதன் படி மாநிலங்கள் வாரியாக நிலவரங்களை பார்க்கலாம்:
பீகார் – 10.58%
சண்டிகர் – 11.64%
இமாச்சல பிரதேசம் – 14.35%
ஜார்கண்ட் – 12.15%
ஒடிசா – 7.69%
பஞ்சாப் – 9.64%
உத்தரப் பிரதேசம் – 12.94%
மேற்கு வங்கம் – 12.63%